Cine Gossips
காமெடி ரோல்னு சொன்னா காதுலேயே போடுவேன் – R.J. நடிகர் செய்யும் அலப்பறை !
அரிச்சுவடி படிப்பின் பெயர் கொண்ட அரசியல் படத்தின் வெற்றி, இதுவரை காமெடியாக கம்பு சுற்றிக் கொண்டிருந்த அப்படத்தின் ஹீரோவான வாயாடி நடிகரை ஏகத்துக்கும் ஏற்றி விட்டிருக்கிறதாம். கதை சொல்ல வருகிறவர்களிடமெல்லாம், ‘காமெடி ரோல்னு சொன்னா காதுலேயே போடுவேன். என்னை ஹீரோவா வெச்சி படமெடுக்கிறதா இருந்தா எடுங்க, இல்லேன்னா நாசமா போங்க’ என்று வாயடிக்கிறாராம். “நீங்கதான் சார் ஹீரோ” என்று கதை சொல்ல ஆரம்பித்தால்,“முதல்லே சம்பளத்தை பேசிப்போம்” என்று சொல்லிவிட்டு, அவர் சொல்லும் தொகையைக் கேட்டு தொலைதூரத்துக்கு ஓடுகிறார்களாம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதெல்லாம் சரிதான். ஆனால், இன்னும் காற்றே அடிக்க ஆரம்பிக்கலையே பாஸ்? போதும் உங்கl அலப்பறை என்கின்றனர்.