குண்டாயிருக்கிறேனா? புலம்பும் நடிகை!

அந்த நித்திய நடிகையிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே 2 -வது, 3 -வது  ஹீரோயின் கதாபாத்திரங்கள் தான் தருகிறார்களாம் எனக்கென்ன குறைச்சல்? எங்கிட்டே அழகு இல்லையா? இளமை இல்லையா? நான் ஹீரோயினா நடிக்கக்கூடாதா? என்று தமிழில் தனக்கு நெருக்கமான ஹீரோவிடம் நடிகை புலம்பியிருக்கிறார், அதற்கு நடிகர் முதலில் குண்டாகியிருக்கும் உடம்பை குறை இல்லேன்னா அண்ணி, அம்மா கதாபாத்திரத்தில் தன நடிக்க வேண்டிவரும் என்று பதிலுக்கு கிண்டலடித்திருக்கிறார். சமீபத்தில் உடல் எடையைக் குறைத்து ஆச்சரியப்படுத்திய பிரமாண்ட நடிகை ஒருவரிடம் ஆலோசனை செய்திருக்கிறாராம் நித்தியம்.