கோலிவுட்டில் வில்லனாகும் மாறும் பாலிவுட் ஹீரோக்கள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படம் 2.ஓ.ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் சில வில்லன்கள் இருந்தபோதும் மெயின் வில்லனாக இந்தி நடிகர் அக்சய்குமாரிடம் பேசும்போது, ரஜினி படம் என்றதும், அவருடைய ரசிகன் நான். அதனால் அவர் படத்தில் வில்லனாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று உடனே ஓகே சொல்லி இப்போது ரஜினியுடன் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதேபோல், தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல 57வது படத்தில் நடிக்கும் முக்கிய வில்லன் யார் என்பது முடிவாகாத நிலையில், தற்போது, இன்னொரு பாலிவுட் ஹீரோவான அபிஷேக்பச்சனை நடிக்க வைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறதாம். மேலும், ரஜினி படங்களில் 2.ஓ எப்படி மெகா பட்ஜெட்டில் தயாராகி வருகிறதோ அதேபோல் அஜித் படங்களில் அவரது 57வது படமும் மெகா பட்ஜெட்டில்தான் தயாராகிக்கொண்டிருப்பதாக​ தகவல் வெளியாகியுள்ளது.