சாய் பல்லவியின் முதல் தமிழ்ப்படம்!

சாய் பல்லவியைக் கதாநாயகியாகக் கொண்டு கரு என்கிற புதிய படத்தை ஆரம்பித்துள்ளார் விஜய். லைக்கா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரேமம் படம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற சாய் பல்லவி, நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.இந்நிலையில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கப்படுகிறது. தெலுங்கில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நாக செளரியா நடிக்கவுள்ளார்.

தில் ராஜூ தயாரிப்பில், வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நானிக்கு ஜோடியாக எம்சிஏ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சாய் பல்லவி.