சினிமாவை விட்டு விலகும் உச்ச நட்சத்திரம் !

இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவரான லால் நடிகர், சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளை கடந்துவிட்டது. இருந்தாலும், தற்போதைய இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் வித்தியாசமான, அதிரடியான கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறாரார். இந்நிலையில் இனிவரும் காலங்களில் சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம். தற்போது அவர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 4 படங்களில் நடித்து வருகிறாராம். மேலும் தான் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறாராம். அந்த படத்திற்கு பிறகுதான் சினிமா படங்களை குறைத்துக் கொண்டு, குடும்பத்திற்கு அதிக நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறாராம்.