சின்னத்திரை நடிகைக்கு மிரட்டல் விடுக்கும் அரசியல்வாதிகள் !

முன்னணி சேனல் செய்தி வாசிப்பின் கடைசியில் வரும் வானிலை அறிவிப்பின் மூலமே புகழ் பெற்றவர் அந்த சின்னத்திரை நடிகை. பல வருடங்கள் அந்த பணியை செய்துவிட்டு அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளராக புகழ் பெற்றார். தொடர்ந்து மெகா தொடர்களிலும் நடித்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். திடீரென தனெக்கென யூ டியூப் சேனலை உருவாக்கி அன்றாட நாடு நடப்புகளை விமர்சித்து வந்தார். இப்போது அதையும் நிறுத்தி விட்டார். அரசியல்வாதிகளின் மிரட்டல் காரணமாக சின்ன திரை மற்றும் சமூக வலைத்தளத்திலிருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக கூறியிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கும், தொகுப்புக்கு இடைவெளி விட்டேன். இப்போது மனதிற்கு பிடித்த மாதிரி ஏதாவது செய்யலாமே என்று நாட்டு நடப்புகள் பற்றி பேசினேன் நான் பேசிய கருத்துக்கு பதில் கூறாமல், நான் பேசவே கூடாது என்றும் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டுகிறார்கள் என இந்த விஷயம் பற்றி தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் நடிகை புலம்பிவருகிறாராம்.