சிம்பு, ஓவியா காதல்: அடிக்கடி சந்திப்பு…

சிம்பு, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில்  நடிக்கிறார். இந்த படத்திற்காக தனது உடம்பை சிக்ஸ்பேக் தோற்றத்திற்கு மாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக சிம்புவுக்கும், ஓவியாவிற்கும் காதல் என்ற கிசுகிசு பரவி வருகிறது. ஓவியா சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக கூறியதற்கு, அதில் சிம்பு  உருகி நான் மணந்து கொள்கிறேன் என்று இணையதளத்தில் தகவல் வெளியாகி பரபரப்பானது. இந்நிலையில் சிம்புவும், ஓவியாவும் இணைத்து 'மரண மட்ட' என்ற பாடலை பாடினார்கள். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்கின்றனர். இவர்கள் திருமணம் செய்துகொண்டதாக மாலையும் கழுத்துமாக இருக்கும் புகை படம் வெளியானது, பிறகு தான் தெரிந்தது அது  கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்று. தற்போது ஓவியா காஞ்சனை 3, ஓவியாவை விட்டா யாரு, சீனி, சிலுக்குவார்பட்டி சிங்கம், களவாணி 2 ஆகிய படங்களில் நடிக்கின்றார். அது தவிர இயக்குனர் அனிதா இயக்குகின்ற புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு இசை அமைகின்றார். சிம்பு முதன் முறையாக சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு இசையமைத்தார். இரண்டாவது படமாக ஓவிய நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கின்றார். இவர்கள் இருவர்களுக்கிடையே காதல் கிசுகிசு பரவும்  நிலையில் ஓவியா நடிக்கு படத்திற்கு இவர் இசை அமைக்க ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.