டாப்சி: ரசிகர்களின் காதல் கடிதம் நெகிழ செய்கிறது….

நடிகை டாப்சி தமிழில் “ஆடுகளம்”  படத்தில் பிரபலமாகி, ஆரம்பம்,காஞ்சனா 2,வைராஜா வை என தொடர்ந்து நடித்தார். அதற்கு பிறகு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நிறைய பேர் காதல் கடிதங்கள் அனுப்பி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திகிறார்கள். இது குறித்து  அவர் “எனக்கு ரசிகர்களிடம் இருந்து கடிதங்கள் குவிகின்றன. ஒவ்வொரு கடிதத்திலும் அவர்களின் அன்பை பார்க்க முடிகிறது. அதில் ஓரு ரசிகர் எழுதியது என்னை மிகவும் நெகிழ செய்தது. அவர் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் கவரும் வகையில் இருந்தது. அதில் “நான்  மது அருந்த மாட்டேன்,மாமிசத்தை தொட மாட்டேன், எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் மிகவும் தூய்மையானவன், உன்மேல் எனக்கு இருக்கும் அன்பை நிரூபிக்க உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருக்கிறேன். என் மூளையை பரிசோதிக்க மறந்து விடாதே .என் மனதில் முழுமையாக நீதான் இருக்கிறார் ” என்று இருந்தது. இது   எனக்கு சிறந்த கடிதம். இந்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.