தங்கை வேடத்தில் நடிக்கமாட்டேன் கண்டீஷன் போடும் நடிகை

முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரை தங்கை வேடத்தில் நடிக்கத் தூண்டியது. இளம் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயினாக நடித்து வந்த நடிகை திடீரென்று இரண்டு படங்களில் தங்கை வேடத்தில் நடித்தது அவருக்கு மைனஸ் ஆக அமைந்துவிட்டது. தங்கையாக நடித்த வகையில் அவரது நடிப்புக்குப் பாராட்டு கிடைத்தாலும் அடுத்தடுத்து வரும் படங்களும் ஹீரோக்களின் தங்கையாக நடிக்கவே வருகிறதாம். இதில் கடுப்பாகிப் போன நடிகை இனிமேல் ஹீரோக்களுக்கு தங்கையாக நடிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக சக தோழிகளிடம் கூறி வருகிறார். இதனால் தன்னை தேடிவரும் இயக்குனர்களிடம் தங்கை வேடமென்றால் கால்ஷீட் தரமுடியாது என கண்டீஷன் போடுகிறாராம்.