தனுஷின் உரிமை வழக்கில் மருத்துவரின் அதிர்ச்சி தகவல்

நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சையின் மூலம் அழித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கை நேற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சமர்பிக்கப்பட்டது.

மருத்துவ அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மிகப்பெரிய திருப்பு முனையாக மருத்துவ அறிக்கை கருதப்படுகிறது.

இந்நிலையில் இவ்வழக்கு குறித்த​ விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.