தன்னைவிட வயதில் மூத்தவரை விரும்பும் டிவி நடிகை !

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த அந்த நடிகை தனது முயற்சியால் பெரியத்திரைக்கு சென்றார். அங்கே சில இரண்டாவது கதாநாயகியாக நடித்துவந்தார். பின்பு அந்த இயக்குனரின் பார்வை பட்டு இயக்குனருடன் சேர்ந்து நடிகை நடித்த படம் பெரும் வெற்றிபெற்றது. இருவரும் ராசியான ஜோடி என பெயர் வாங்கினர். இதனை தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் நடிகைக்கு வாய்ப்பு தந்துள்ளார் அந்த இயக்குனர். தொடர்ந்து அவருடன் அடுத்த படத்திலும் நடித்து வருகையில் நடிகைக்கு இயக்குனரின் மேல் ஈர்ப்பு வந்துள்ளது. இதனை அவரிடம் தெரிவித்துள்ளார் நடிகை. மேலும் இண்டஸ்ட்ரியில் இதை இயக்குனர் என்றாலே நடிகைகள் சற்று பின்வாங்குவர். ஏனெனில் அவர் படத்தில் நடித்த நடிகைகளை அவர் தவறாக வழிநடத்துவார் என்று, ஆனால் இந்த நடிகை மட்டும் இயக்குனர் விஷயத்தில் தலைகீழ். இதைவிட கொடுமை அந்த இயக்குனருக்கு நடிகையை விட இருமடங்கு வயது வித்தியாசம்.  இது எதில் போய் முடியுமென அனைவரும் திகைப்பில் உள்ளனர் ஏனெனில் அந்த நடிகை ஒரு வளர்ந்துவரும் நடிகை பட்டியலில் உள்ளார். இந்நேரத்தில் இந்த காதல் அதுவும் வயதானவரை காதலிப்பது சரியல்ல என புலம்பிவருகின்றர் நடிகையின் நலம்விரும்பிகள்.