தல அஜித்துடன் நடிக்க விரும்பும் பிரபல நடிகை! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் ஜோடி சேர வேண்டும் என்று எல்லா நடிகைகளும் விருப்பப்படுவார்கள். ஒரு சில இளம் நடிகைகள் அவர்களுக்கு தங்கையாக கூட நடிக்க தயார் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த நடிகை அமலாபால் தற்போது அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை கூறியுள்ளார். தற்போது அஜித்தின் 58வது படத்தின் நாயகி வேட்டை நடந்துவரும் நிலையில் அமலாபால் இப்படி சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் இந்த படத்தின் நாயகியாக கூட நடிக்கலாம் என்று கூறுகின்றனர்.