திருமணத்திற்கு தயாராகும் நான் கடவுள் நடிகர்!

கோலிவுட்டில் சக நடிகைகளிடம் அதிகம் கடலைபோடுபவர், திருமணமே செய்துகொள்ளாமல் தனது நண்பன் நடிகருக்கு திருமணம் நிச்சயமான பிறகுதான் தனக்கு திருமணம் நடக்கும் என்று சொல்லி வந்த நடிகர், இப்போது தன் திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக வீட்டில் சொல்லிவிட்டாராம். இந்நிலையில், அவர் கரம் பிடிக்கப்போவது கடைசியாக அவரது படத்தில் ஜோடி சேர்ந்த நடிகைதான் என கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது. இது பற்றி யாராவது கேட்டால் நடிகர் வாயை மூடி விடுகிறாராம். தனக்கு நெருங்கிய ஹீரோ நண்பர்களிடம் கூட தனது திருமணம் குறித்து பேசுவதில்லையாம்.