துப்பறியும் பணியில் ஹன்ஸ்!

ஹன்ஸ் நடிகைக்கு திடீரென்று கோலிவுட்டில் பட வாய்ப்பு குறைந்துவிட்டது. அதற்கு என்ன காரணம் என்று துப்பறியும் பணியில் தன் தாய்க்குலத்தை முடுக்கிவிட்டுள்ள அவர்கள், சம்பள பிரச்னை காரணமாக இருக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்களாம். அவர்களுக்கு போட்டியாக இருக்கும் சில நடிகைகள், சம்பள விஷயத்தில் முன்பின் இருப்பதால், தாங்களும் அந்த வழியை பின்பற்றி, புதுப்பட வாய்ப்புகளை அள்ளலாமா என்ற யோசனையில் தீவிரமாக மூழ்கியிருக்கிறார்களாம்.