நடிகரை போட்டு கொடுத்த தயாரிப்பாளர் !

சினிமா உலகில் வெளிப்படையாகவே கிளுகிளுப்பான விஷயங்கள் நிறைய நடக்கும். சிலர் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே. திரையில் மிகவும் அப்பாவி போன்ற மாயை ஏற்படுத்தி விட்டு பின்னால் மன்மதனாக வாழ்பவர்கள் நிறைய உண்டு. அந்த வகையில் மாட்டி கொண்டவர் தான் அந்த தலையாட்டி நடிகர் ஜெய். இவரும் அந்த நடிகையும்  காதலிப்பதாக பல வதந்திகள் வந்தன. ஆனால் இருவரும் அது உண்மையில்லை என மறுத்தாலும் ஒன்றாகவே சுற்றி வந்தனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் போஸ்டர் நந்தகுமார்சமீபத்தில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் அந்த நடிகர் நடிகை செய்த கேவலமான காரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது அந்த நடிகர் நடித்த படப்பிடிப்பின்போது நடிகர் எப்போதும் நடிகையின் அறையில்தான் தங்குவார் என்றும், அதற்கு எதுக்கு இரண்டு அறைகள் வாடகைக்கு? என்று கேட்டதற்கு இருக்கட்டும் என நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படப்பிடிப்பின் போது பல வகையில் தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக புலம்பித் தள்ளி உள்ளார். இதனால் கோபத்தில் பேசுவதாக நினைத்து நடிகரை பற்றிய உண்மையை உடைத்து விட்டார். இதனால் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம் நடிகர்.