நடிகைக்கு பின்னால் இருந்து செயல்படும் நடிகர் !

அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம். நடிகையின் சம்பளம் உள்பட அவர் நடிக்க வேண்டிய படத்தையும் நடிகரே முடிவு செய்கிறாராம். ஏறக்குறைய நடிகையின் ஆலோசகர் போல் செயல்படுகிறாராம் நடிகர். அரசியல் குடும்பத்தை சேர்ந்த நாயகன் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக அந்த நடிகையை கேட்டபோது, ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேள் என்று உத்தரவிட்டவர், நடிகர்தானாம். அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று தயாரிப்பாளர் சொன்னதும், சம்பளத்தை குறைத்து நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிடு என்று நடிகையின் பின்னால் இருந்து நடிகையை இயக்குபவரும் நடிகர்தானாம்.