நடிகைக்கு மிரட்டல் விட்ட முக்கிய அமைச்சர்

சினிமா பிரபலங்களில் சிலர் தங்கள் பிசியான வாழ்க்கைக்கு நடுவிலும் சமூக விசயங்களிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். பலருக்கும் உதவி புரிய முன் வருகிறார்கள். அதே வேளையில் சில சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. அந்த வகையில் இளம் நடிகை ஒருவர் தற்போது அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த வருடம் கர்நாடகாவில் பெய்த மழையால் குடகு மாவட்டத்தில் மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளார். இதுகுறித்து அவர் அரசு கட்டி தரும் வீடுகள் தரமானதாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அந்த மாவட்ட அமைச்சர் கண்டனம் தெரிவித்ததோடு நடிப்பதோடு நிறுத்திக்கொள், அரசு விஷயங்களில் தலையிட வேண்டாம் என மிரட்டல் விட்டுள்ளார். நடிகை என்றால் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற தடை எதுவும் இல்லை என அமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.