நண்பனால் சரிவை சந்திக்கப்போகும் வளர்ந்த நடிகர் !

அந்த நடிகரின் முக்கிய முடிவுகளை நெருங்கிய நடிகரான  அந்த நண்பன் நடிகர் தான் எடுக்கிறாராம். இதன் காரணமாக அவர் தனது நலம்விரும்பிகளை இழந்து வருகிறார். சமீபத்தில் நடிகரின் நிறுவனம் மூலம் நடத்திய இசை விழாவிலும் நண்பன் நடிகரால் தான்கடும் சர்ச்சை எழுந்தது. வளர்ந்த நடிகரின் தயாரிப்பு நிறுவனத்தையும் இந்த நடிகர் தான் பார்த்து கொள்கிறாராம். அவரால் தான் அந்த முக்கிய இயக்குனரும் நடிகர் தயாரிக்கும் படத்திலிருந்து பாதியில் விலகியுள்ளார். இப்படி மேலும் சில பல புகார்களை நண்பன் நடிகருக்கு எதிராக அடுக்குகிறார்கள். நடிகர் முழுவதுமாக நண்பனின் மேல் நம்பிக்கை வைப்பதற்க்கு காரணமாக கூறப்படுவது இருவரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். அதனால்தான் இருவருக்குள்ளும் அவ்வளவு நெருக்கம் என்கிறார்கள். மற்றவர்களை விட்டு நடிகர் விலகாமல் நண்பனை விலக்கி வைத்தால் தான் நடிகர் இழந்த பெருமையை மீட்க முடியும் என்று நடிகருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள். இல்லையெனில் நடிகர் மேலும் பல சரிவுகளை சந்திக்கவேண்டியதிருக்கும்.