நம்பர் ஒன் நடிகையை காலி செய்ய நினைத்து சூடுபட்ட 2 நடிகைகள் !

சுமாராக நடிக்கும் நடிகை ஒருவரும், ரொம்ப சுமாராக நடிக்கும் நடிகை ஒருவரும் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார்கள். அதில் தவறு இல்லை. திறமையை வளர்த்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் அந்த இடத்திற்கு வரலாம். அதனால் அவர்களின் ஆசை நியாயமானதே. அந்த இரண்டு நடிகைகளுமே தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சர்ச்சை நடிகையை வீட்டிற்கு அனுப்பி வைக்க நினைத்தனர். மனதில் நினைத்ததை பேட்டியில் தைரியமாக சொல்லினார்கள். சபதம் போட்ட இருவரையும் நம்பி வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுக்க இயக்குநர்கள் தயாராக இல்லை. அதில் ஒரு நடிகை இயக்குநர்களிடம் தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம். உள்ள கதாபாத்திரத்தையே நடிக்கத் தெரியவில்லை இதில் வெயிட்டு வேறயா என்று இயக்குநர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.