நிபந்தனைகள் போடும் ரவுடி பேபி !

தமிழகத்தை சேர்ந்த டீச்சர் நடிகை மலையாள படத்தின் மூலம் பிரபலமானாராம். இவர் தமிழில் ஹோம்லி கேரக்டரில் நடித்த படங்கள் பிளாப் ஆகியதாம். இதையடுத்து கிளாமர் கதைகளுடன் வரும் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களிடம், அவர் 2 நிபந்தனைகளை விதிக்கிறாராம்.“குட்டை பாவாடை அணிந்து நடிக்க மாட்டேன்” என்பது அவரின் முதல் நிபந்தனையாம். “முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்” என்பது இரண்டாவது நிபந்தனையாம். ஒரு தெலுங்கு படத்தில் பயங்கரவாதியாக நடிக்கும் நடிகையை பற்றி டைரக்டர் ஒருவர், “கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் அந்த நடிகை பயங்கரவாதியாக நடிக்கலாமா? இது, எந்த ஊர் நியாயம்?” என்று புலம்புகிறாராம்.