படம் ஓடாவிட்டாலும் பந்தாவிற்கு குறைவில்லை !

அந்த மூன்றெழுத்து நடிகர், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார். சமீபகாலமாக இவர் தனக்கு ஜோடியாக, ‘நம்பர்-1’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகிறாராம். உனக்கெல்லாம் ஜோடியாக அந்த நடிகை நடிக்க மாட்டார் என்று சொல்லும் தயாரிப்பாளர்களிடம், பதி நடிகருடன் ஜோடி சேர்ந்த அவர் என்னுடன் ஜோடி சேர மாட்டாரா? என்று எதிர் வாதம் செய்கிறாராம்! மான், மேய்ச்சலை நிறுத்துமா?