பட வாய்ப்புக்காக பொய் சொல்லும் , நடிகை

சென்னை: ஒரு நடிகை பட வாய்ப்புக்காக வாய் கூசாமல் பொய் சொல்கிறார். அண்டை மாநிலத்தில் இருந்து வந்து சென்னையில் தங்கி தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அந்த நடிகை. வளர்ந்து வரும் நடிகையான அவர் ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அவருக்கு மார்க்கெட் சூடுபிடுத்துள்ளதால்  வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகைக்கு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று பேராசை வந்துவிட்டது. அதனால் பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார். ஆசைப்படறதில தவறு இல்லை. ஆனால் அதற்காக அந்த  நடிகை பொய் சொல்வது தான் தவறு.