பலவருட போராட்டத்திற்கு பிறகு ரிலீசாகவிருக்கும் பிரபல நடிகரின் படம் !

ரொமாண்டிக் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அசுர நடிகரை வைத்து படம் இயக்கினாராம். இந்த படமும் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியதாம். இயக்குனரும் இப்படத்தை திட்டமிட்டபடி எடுத்து முடித்துவிட்டாராம். ஆனால் வெளியீட்டின் போது படம் கடன் பிரச்சனையில் சிக்கியதாம். இதனால் 3 வருடங்களாக படம் ரிலீசாகாமல் உள்ளதாம். சமீபத்தில் இப்படத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, டெப்டம்பர் மாத ரிலீசுக்கு தயாராகி வருவதாக செய்திகள் பரவி வருகிறதாம். இதனை கேட்ட டுவிட்டர் வாசிகள் எந்த வருட டெப்டம்பர் என கேட்டு கிண்டலடித்து வருகிறார்களாம். ஆனால் இதுகுறித்து படக்குழு எந்தவித தகவலும் தெரிவிக்க வில்லையாம்.