பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா!!!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவரான​ ஹன்சிகாவிற்கு, ஜெயம்ரவியுடன் நடித்த போகன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லை.அதனால் தற்போது மும்பையில் போய் செட்டிலாகி விட்டார்.இந்நிலையில் பிரபுதேவா தேவி படத்தை அடுத்து “யங் மங் சங்” படத்தில் நாயகனாக நடித்து வருகிறார், அதையடுத்து கொலையுதிர்காலம் படத்தின் இந்தி பதிப்பில் வில்லனாக நடிக்கிறார்.

அதோடு, விஷால்-கார்த்தி நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தையும் இயக்கி வருகிறார். அந்த படங்களை முடித்ததும் ஒரு படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார் பிரபுதேவா. அந்த படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.