மக்கள் நாயகனின் யுக்தி!

கதை நன்றாக இருந்தால் நடிகர், புதுமுக இயக்குனர் என்பது பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்  அந்த கதையின் கதாபாத்திரமாகவே தன்னை மாற்றி அதில் ஜொலிப்பவர். நடிகரிடம் கதை சொல்ல தினமும் குறைந்தது 3 டைரக்டர்கள் வருகிறார்களாம். தமிழ் திரையுலகில் இதுவரை வராத கதை என்று ஆரம்பிக்கிறார்களாம். புத்திசாலியான நாயகன் என்பதால், அவர்களை சமாளிப்பதற்காக உடனே நடிக்க சம்மதிப்பதில்லை. நண்பர்களுடன் கலந்து பேசி, அவர்கள் கருத்தை கேட்ட பிறகே நடிக்க சம்மதிக்கிறாராம். தன்னை தேடி வருகிற புதுமுக டைரக்டர்களிடம் இருந்து தப்பிக்க தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கிறாராம்.