முன்னனி நடிகருடன் காதலில் விழுந்த​ காஜல்!..

ஹீரோ, ஹீரோயின்களை பற்றி அடிக்கடி கிசு கிசு வருவது வழக்கம் அந்த​ வரிசையில் தற்போது காஜல் அகர்வால் சிக்கியுள்ளார்.தற்போது, தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரை காதலிப்பதாக​ கிசு கிசுக்கப்படுகிறது.இவர் சென்னையில் பிறந்து தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களது சந்திப்பு, சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடப்பதாக​ கூறப்படுகிறது.அதே சமயம் தொடர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி நாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது விஜய், அஜித் ஆகிய இருவருடனும் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார். அவரைப் பிடிக்காத சிலர் வதந்தியை கிளப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.