யார் எங்கு சென்றால் எனக்கென்ன – சிம்பு

சிம்பு மீது சர்சைகளும் புகார்களும் வந்த​ வண்ணம் இருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விடுபட்டு அமைதியாக இருக்கிறார்.தற்போது வெளியான​ AAA  படத்தின் டீசர் செம்ம ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் அச்சம் என்பது மடமையடா படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றில் இவர் பேட்டியளிக்கையில் ‘உங்களுடன் வந்து தனுஷ் இன்று வேறு லெவலுக்கு சென்றுவிட்டாரே’ என்று கேட்டுள்ளனர் அதற்கு சிம்பு ‘சந்தோஷம் தானே, அவருடைய வளர்ச்சியை கண்டு நான் சந்தோஷப்படுகிறேன், அதே நேரம் அவர் எங்கு சென்றால் எனக்கென்ன, என் வேலையை நான் பார்த்து வருகிறேன் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.