யோகா நடிகையை நினைத்து வருந்தும் நடிகர் !

வரலாறு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, உடல் எடை கூடியதால் படங்களில் நடிக்காமல் இருந்தாராம். விரதம், இரவு பகலாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை தற்போது குறைத்திருக்கிறாராம். தனது ஒல்லியான உடல் அழகை மனதுக்கு பிடித்த தெலுங்கு நாயகன் பாராட்டுவார் என்று நடிகை எதிர்பார்த்தாராம். ஆனால், அந்த நாயகனோ பாராமுகமாக இருக்கிறாராம். அதோடு, “அந்த கதாநாயகி முன்பு மப்பும் மந்தாரமுமாக அழகாகவே இருந்தார். உடல் எடையை குறைத்தபின், அந்த அழகெல்லாம் காணாமல் போய்விட்டது” என்று பரிதாபப்படுகிறாராம்.