ரன்பிர் மற்றும் ஆலியா காதல்….

இந்தி நடிகர்கள் சிலர் உடன் நடிக்கும்  நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதே போல் கரீனா கபூரும் நடிகர் சயீப் அலிகானும் ஏற்கனவே காதல் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்துள்ளனர். அதன் பிறகு அனுஷ்கா சர்மா சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லியை காதல் திருமணம் செய்து கொண்டார். இதே போல் தற்போது இந்தி நடிகர் ரன்பிரும் ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் ஜோடியாக நடித்து தற்போது காதல் செய்வதாக செய்திகள் பரவி வருகிறது. ரன்பிர் கபூர் இதற்கு முன் கத்ரினாவை காதலித்தார் ஆனால் அந்த காதல் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். இதேபோல் ஆலியாவும் இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்தார் . பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தற்போது இவர்களின் காதல் விவகாரத்தை இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.