ராஜமவுலிக்கும்-தமன்னாவுக்கும் இடையே பிரச்சனையா?

பிரமாண்ட பட இயக்குநர் ராஜமவுலி , பாகுபலி படத்தை இந்திய அளவில் உருவாக்கியது போலவே தற்போது பாகுபலி-2 படத்தையும் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 28-ந்தேதி வெளியாகும் இந்த படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அதிக நேரம் பேசாத ராஜமவுலி படக்குழுவினருக்கு தனது நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த​ டுவிட்டர் வெளியீட்டில் தமன்னாவின் பெயரை மட்டும் அவர் குறிப்பிடவில்லையாம்.இதனால் படப்பிடிப்பு நடந்தபோது தமன்னா ஏதேனும் கால்சீட் சொதப்பல் செய்து விட்டாரா? இல்லை வேறு வகையில் அவருக்கும் ராஜ மவுலிக்குமிடையே ஏதாவது பிரச்சினையா? என்கிற ரீதியில் தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.மேலும், பிரபாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோரின் நடிப்பு குறித்து பேசிய ராஜ மவுலி, தமன்னாவை கண்டுகொள்ளாமல் விட்டதினால், ஒருவேளை அவருக்கு பாகுபலி-2வில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் இல்லையோ அதனால்தான் அவரை கண்டுகொள்ளாமல் விட்டாரோ என்றும் செய்திகள் வெளியாகிவருகிறது.