ராணா, ரகுல் ப்ரீத் சிங்: காதல்

ரகுல் ப்ரீத் சிங், உங்களுக்கும் ராணாவுக்கும் காதலாமே  என கேட்டால் அவரின் சிவப்பான மூக்கு, மேலும் சிவந்து விடுகிறது. நான் இப்போது தான் திரைப்படத் துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறேன் இப்போது இப்படி வதந்தி பரப்பினால் எப்படி என்றும், ஆனால் இதுவும்  ஜாலியாக தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். காதல் விவரங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ் திரைப்படத் துறையில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்காக முட்டி மோதி தற்போது சூர்யா மற்றும் கார்த்தியுடன் தலா ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இப்படி தான் முதலில் ராணாவிற்கும், த்ரிஷாவுக்கும் காதல் என வதந்தி பரவியது. தற்போது எனக்கு வதந்தி பரவுகிறது என்று கூறியுள்ளார்.