ராதிகா ஆப்தே: நடிகைகளை காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுகின்றனர்…

நடிகை ராதிகா ஆப்தே “கபாலி” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் அரைகுறை ஆடையில் இருக்கும் படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்ச்சி கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவர் நடிகைகளை காதல் கட்சிகளுக்கும், கதாநாயகனுடன் மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனக்கு அதுபோன்று நடிப்பதில் உடன்பாடு  இல்லை என்றும், திரும்ப திரும்ப ஒரே மாதிரியான வேடங்களிலும் நடிக்க மாட்டேன் என்றும், வித்தியாசமான கதைகளாகவும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேடிப்பிடித்து நடிக்கிறேன். இந்த படங்களில் தினமும் புதிய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன் என்றும் அவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலரை திருமணம் செய்து கொண்டதாகவும், மும்பையிலும்,லண்டனிலும் வீடு உள்ளதாகவும் கூறியுள்ளார்.மும்பை வீட்டை அழகாக உள் அலங்காரம் செய்து இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.