லாரன்ஸ் செய்யாததை சமுத்திரக்கனி செய்வாரா?

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா', மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளியானது.ஆனால் இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் பேசி முடிவு செய்து வெவ்வேறு தேதிகளில் ரிலீஸ் செய்தனர்.
 
இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான​ சமுத்திரக்கனி நடித்த 'கொளஞ்சி' மற்றும் சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'தொண்டன்' ஆகிய இரண்டு படங்களும் வரும் மே 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக விளம்பரம் வெளிவந்துள்ளது. இந்த​ படங்கள் குறித்த​ தேதியில் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.