வாய்ப்பு இல்லையென்றாலும் பந்தாவுக்கு குறைவில்லை இந்த யோகா நடிகைக்கு !

தமிழ் ரசிகர்களிடையே எப்பொழுதும் இந்த நடிகைக்கு மவுசு உண்டு. ஆனால் தற்பொழுது கைவசம் படங்கள் இல்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் கொடிகட்டி பறந்தவர். உடல் எடை பிரச்சனையால் புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். தற்போதுதான் உடல் எடையை ஏதோ ஏதோ செய்து குறைத்து புதிய பட வாய்ப்புகளை பெரும் வேளையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாகும் வாய்ப்பு நடிகையின் கதவை தட்டியது. ஆனால் அவரோ கோடிகளில் சம்பளம் கேட்கவே தயாரிப்பாளர் ஆடிப்போய் விட்டாராம். சரியென நடிகை இறங்கி வந்து ஒரு கோடிக்கு ஒத்துக்கொண்டு படப்பிடிப்பையும் தொடங்கி விட்டனர். படப்பிடிப்பு பாதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது தயாரிப்பு தரப்பு நடிகைக்கும் ஐம்பது லட்சம் மட்டும் தருவதாக கூறியிருக்கிறது. இதைக்கேடி அதிர்ந்த நடிகை ஒரு கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் இல்லையென்றால் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். வேறு வழி இல்லாமல் தயாரிப்பு தரப்பு இறங்கி வந்துவிட்டதாம். கைவசம் பட ஏதும் இல்லை என்றாலும் பந்தாவுக்கு ஒன்றும் குறைவில்லையென்று அலுத்துக்கொண்டதாம் தயாரிப்பு தரப்பு.