Cine Gossips
வாரிசுடன் நடிக்க மறுக்கும் தேசிய விருது நடிகை !

தமிழ்-மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மலையாள வாரிசு நடிகர். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தேசியவிருது நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்தது. முதலில் சம்மதம் தெரிவித்தவர் பின்னர் ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தாராம். ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைப்பதா? அல்லது குறைந்த சம்பளத்துக்கு சம்மதிக்கும் வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா? என்று பட தயாரிப்பாளர் யோசித்து வருகிறார்!