வாரிசு நடிகையால் கலக்கத்தில் இருக்கும் பெரிய குடும்பம்

பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு முக்கியமான வாரிசு நடிகையும் ஒரு போட்டியாளராக சென்றுள்ளார். ஏற்கனவே அவரது குடும்ப பிரச்சினைகள் ஊரறிந்த கதை தான். நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரும், அதை மீண்டும் மக்களிடம் ஞாபகப் படுத்தி விட்டுத் தான் நடிகை உள்ளே சென்றார். புறணி பேசுவதற்குப் பேர் போனது அந்த நிகழ்ச்சி. அதோடு, வீட்டிற்கு உள்ளே ஜாலியாக பேசிக் கொள்வதைக் கூட ஊதிப் பெரிதாக்குவதில் வல்லவர்கள். எப்படியும் வாரிசு வீட்டிற்குள் தனது குடும்ப விவகாரம் பற்றி பேசுவார். அது நிச்சயம் பெரிய விசயமாகும் என இப்போதே கவலைப்பட ஆரம்பித்துள்ளது அவரது பெரிய குடும்பம். நிச்சயம் வீட்டிற்குள் இருந்தபடி தங்களது மானத்தை வாங்கி விடுவார் என்ற பயம் அவர்களுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் எப்போது அவர் எலிமினேட் ஆவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக அவர்களிடையே உள்ளதாம். தங்களைப் பழி வாங்க இந்த நிகழ்ச்சியை அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பது தான் தற்போதைக்கு அவர்களது முக்கியக் கவலை. என்னென்ன ரகசியங்கள் வெளிவரப் போகிறதோ என்பது தான் கோலிவுட்டில் இப்போது பேச்சாக உள்ளது.