விஜய்யின் அரசியல் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரன்

எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்ததால், வளர்ந்து வரும் இளைய தலைமுறை நடிகர்கள் பலருக்கு எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வருகிறது.இந்தநிலையில், இளையதலைமுறை நடிகரான விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் கடந்த சில ஆண்டுகளாகவே தென்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் அவர் பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வருவதால் அது எதிர்கால அரசியலுக்கு அச்சாரம் போடுவதாகவே தெரியவருகிறது.

ஆனால் இதுகுறித்து விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறுகையில், பத்து வருடங்களுக்கு முன்பே விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர நினைத்தேன். ஆனால் இப்போது அரசியல் வியாபாரமாகி விட்டது. இந்த வியாபார அரசியலுக்குள் விஜய்யை கொண்டு வர வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.