விஜய் சேதுபதி அடுத்த படத்திற்கு சூப்பர்ஸ்டாரின் டைட்டில் நடிக்கிறாரா?

சினிமாவில் மிக பிசியாக, ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வந்த  விஜய் சேதுபதி , சில நாட்களை மட்டும் கொடுத்து மற்ற வேலைகளையும் மிக தீவிரமாக செய்துவருகிறார். தற்போது அவருக்கு தூக்கம் என்பதே இல்லாததால்  ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வப்போது கோழி தூக்கம் போல சில நிமிடங்களே உறங்குவாராம்.  இவர் நடித்த தர்மதுரை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய அடுத்த படத்திற்கு ரஜினிகாந்த் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் சம்போ சிவ சம்போ என்ற பாடல் வார்த்தையையே தேர்ந்தெடுத்து விட்டாராம். விரைவில் சீனு ராமசாமி படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்பதை அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறார்கள். விஜய் சேதுபதி நடிப்பது குறித்த உறுதியான தகவலை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பாத்து கொண்டிகிறார்கள் .