விரல் நடிகருக்கு நேர்ந்த சோகம் !

சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார அந்த நடிகர் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வந்தவர். இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என தமிழ் சினிமாவில் ஆல்-ரவுண்டராக இருந்தார். இவரின் படங்களுக்கு ரசிகர்களும் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இவரின் சில படங்கள் மோசமான தோல்வியை அடைந்தாலும் ரசிகர்களுக்கு இவரின் மீது வைத்த நம்பிக்கை குறையவில்லை என்பதே உண்மை. இந்த நிலையில், இவர் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாதது என தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் தயா‌ரிக்க முன் வருவதில் தயக்கம் காண்பிக்க தொடங்கினார்கள். இதை தொடர்ந்து, தற்போது அந்த நடிகர்  மிகுந்த பண கஷ்டத்தில் இருப்பதாகவும், தனது செலவிற்கும் பெற்றோர்களிடம் இருந்தே பணம் வாங்கி செலவு செய்கிறார் என்று தகவல் வெளியாகி வருகின்றது.