விரல் நாயகனின் மிரட்டல்!

மூன்றெழுத்து இளம் நாயகனுக்கு மணப்பெண் தேடுவதில் பெற்றோர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். மணப்பெண் ரொம்ப உயரமாக இருக்க கூடாது, வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், ஜாதகம் பொருந்த வேண்டும், இதெல்லாம் பெற்றோர்களின் நிபந்தனைகள். இந்த மூன்று நிபந்தனைகளுக்கு ஏற்ற பெண் கிடைப்பது அபூர்வமாக இருக்கிறதாம். இந்த நிலையில் அந்த நாயகன், திருமண விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லையாம். “ரொம்ப வற்புறுத்தினால், இமயமலைக்கு போய் விடுவேன்” என்று மிரட்டுகிறாராம்!