ஷகிலாவின் வாழ்க்கை கதை படமா?

நடிகை ஷகிலா தமிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் கவர்ச்சியாக நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களை அவரின் படங்கள் வசூலில்  வீழ்த்தியது உண்டு. அவர் படங்கள் ஓடிய திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரப்பி வழிந்தது இருக்கும். சாவித்திரியின் வாழ்க்கை கதையை படமாக்கி வருவதுபோல் தற்போது தமிழ்,கன்னடம் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகின்ற இவரின் வாழ்க்கை கதையை படமாக இந்திரஜித் லங்கேஸ் இயக்கி வருகிறார். இதில் அவரின் வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தாவை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிட்டு உள்ளனர்.இதே போல் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை “த டர்ட்டி பிக்சர் ” என்ற பெயரில் படமானது. அதில் வித்யாபாலன் நடித்து இருந்தார்.அந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தெரிய விருது கிடைத்தது.