ஸ்ரேயா: அம்மாவின் எதிர்ப்பால் ரகசிய திருமணம்…

நடிகை ஸ்ரேயா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளனர். சமீபத்தில் அவருக்கு ரஷியாவை  சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோச்செவ்வை காதலிப்பதாகவும், ஆனால் இப்போது திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் தவறானது என்று அவரும் அவரது அம்மாவும் கூறினார்கள். தற்போது உதய்பூரில் அவருக்கு அவரது காதலருக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் ,நெருங்கிய உறவினர்களை  மட்டும் அழைத்ததாகவும் கூறியுள்ளார். திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரும் அவரது காதலரும் மாலையும், கழுத்துமாக நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருடைய காதலுக்கு ஸ்ரேயாவின் அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ரகசிய திருமணம் நடந்தது என தெரிகிறது.