Cine Gossips
கவர்ச்சிக்கு மாறிய பிக் பாஸ் நடிகை
முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் வாங்கினார். அதன் பிறகு குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். முக்கியமான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது அந்நடிகையை பிரபலமாக்கியது. அதைத்தொடர்ந்து தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். அவர் ஒரு சில படங்களில் அவர் ஏற்றது பாலியல் தொழிலாளி கதாபாத்திரம் என்பதால் கவர்ச்சியாக நடிக்க வேண்டியதாக அமைந்தது. மற்றபடி படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களாகத் தான் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் சக நடிகைகளை போல கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். 'உங்களுக்கு ஏன் உங்களுக்கு இந்த வேண்டாதா வேலை' என அவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.