நயன்தாரா,விக்னேஷ் சிவன் காதல்…..

நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவை காதலித்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்று அதுவும் நடக்கவில்லை. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக இணையதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் இணையதளத்தில் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.இவர்கள் இருவரும் ஒரு வீட்டில் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதா அல்லது திருமணம் செய்துகொள்ளாமேலே சேர்ந்து வாழ்கிறார்களா? என்று திரையுலகினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். காதலர் தினத்தன்று இருவரும் அமெரிக்காவிற்கு சென்று கொண்டாடினார்களாம். தற்போதும் அமெரிக்காவில் தான் இருக்கின்றார்களாம். தற்போது நயன்தாரா இமைக்கா  நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விசுவாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். கமலின் இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் அவருடன் பேசி வருகிறார்கள். இதனால் தற்போது அவர் சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.