பெரிய நடிகருக்கு மகளாக நடித்தது தவறு என யோசிக்கும் மகள் நடிகை !

தொடந்து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டுவரும் அந்த மகள் நடிகை மீது அந்த பெரிய நடிகரின் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்துள்ளார் அந்த நடிகை என்னை எதற்காக கட்டுப்படுத்துகிறார்கள், ஒரு நடிகையென்றால் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டியது வரும்தானே என நடிகை கேட்கிறாராம். தொடந்து அந்த பெரிய நடிகருக்கு மகளாக நடித்ததால்தான் அக்கறையாக அறிவுரை சொல்கிறார்கள், ரசிகர்களில் அன்பு தொல்லையால் தனது எதிர் காலமே பாதிக்க பட்டு விடுமோ என அஞ்சுகிறாராம் நடிகை. மேலும் அவருக்கு மகளாக நடித்தது தவறு என யோசிக்குமளவுக்கு புலம்பி வருகிறாராம் அந்த குழந்தை நடச்சத்திரம்.