MeToo னா ?: பிளேட்டை மாற்றிய நடிகை!

பாலிவுட்டில் மீ டூ புகார் எழுவதற்கு முன்பே அது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் அந்த நடிகை. சில பெரிய ஆட்கள் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் ஆதாரங்களையும் வெளியிட்டார்.இந்நிலையில் தான் அவர் பாலியல் புகார்கள், லீலைகளை வெளியிடுவதை அடியோடு நிறுத்திவிட்டார். அதற்கு காரணம் அவர் வேலை இல்லாமல் சும்மா இருப்பதால் தான், அவருக்கு படவாய்ப்புகள் அளித்து அவரது கவனத்தை மீ டூ வில் இருந்து திசை திருப்பியது ஒரு பெரிய இடத்து பிரபலமாம். அவர் செய்த காரியம் சூப்பராக செயல்படத்துவங்கியிருக்கிறது.
நடிகை மீ டூவை எல்லாம் மறந்து நாட்களாகிவிட்டது.