Kollywood Talkies
Kuppathu Raja

குப்பத்து ராஜா பாபா பாஸ்கர் இயக்கத்தில், சரவணன் சிராஜ், சரவணன் தயாரிப்பில், ஜி. வி. பிரகாஷ் குமார், இராதாகிருஷ்ணன் பார்த்திபன், பூனம் பஜ்வா ஆகியோரின் முன்னணி கதைப்பாத்திர நடிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் ஜி. வி. பிரகாஷ் குமாரின் இசையில், கேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில், பிரவீன் கே. எல் படத்தொகுப்பில் 2018ஆம் ஆண்டில் வெளியாகவுள்ளது. நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஜி. வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் தான் இயக்கப்போகுப் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பினை 2016 இல் அறிவித்தார். ஜி. வி. பிரகாஷ் குமாரின் இசையில், கேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில், பிரவீன் கே. எல் படத்தொகுப்பில் இப்படம் உருவாகி வருகின்றது.பூனம் பஜ்வா இத்திரைப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் பாத்திரத்தில் நடித்து வருகின்றார். 1978இல் ரசினிகாந்த் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்னும் திரைப்படத்தின் தலைப்பே ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்குச்சூட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பார்த்திபன் முதன்மையான பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் ஜி. வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டு வருகின்றார்.