Pattas

அசுரன் படத்தில் சிவசாமியாக கலக்கிய தனுஷ், திரவியப்பெருமான் மற்றும் சக்தி என இரண்டு வேடங்களில் நடித்துள்ள பட்டாஸ் படம் எப்படியிருக்கு என்று இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.தனுஷ் கடைசியாக அசுரன் படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முக்கியமானவராகிவிட்டார். பலரின் கண்களுக்கும் இன்னும் அவர் சிவசாமி தான். அதிலிருந்து மாறி தற்போது பட்டாஸாக பொங்கலுக்கு வந்திருக்கிறார்.தனுஷ், பட்டாஸாக ஒரு திருடனாக ஊரில் ஜாலியாக தன் நண்பர் கலக்கப்போவது யாரு சதீஷுடன் சுற்றி வருகிறார். அவ்வப்போது சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அவரை எதிர்வீட்டு பெண்ணாக கண்களை ஈர்க்கிறார் ஹீரோயின் மெஹ்ரீன். மறுபக்கம் சினேகா அடிமுறை என்னும் தற்காப்பு கலை பயின்று தன் ஆசானையே கணவனாக பெற்றவர். அவருக்கு வில்லன் நவீன் சந்திராவால் பெரும் அழிவு. தன் மகனை தொலைத்த ஏக்கத்திலும் தன்னை விட்டு பிரிந்த கணவரின் சோகத்தில் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.இதற்கிடையில் சினேகாவுக்கு ஒரு பெரும் ஆபத்து. அவரை காப்பாற்ற போய் பல உண்மைகள் தனுஷுக்கு தெரியவருகிறது. கதை ரொம்ப பழசு. நடப்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. இது தான் கதையின் மைனஸ்.
7
Good

A good art on ancient tamil art