Kollywood Talkies
Thadam
அருண் விஜய் எழில், கவின் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், எழில் ஒரு சிவில் இன்ஜினியர். சொந்தமாக சைட் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அதே நேரத்தில் கவின் பல திருட்டு வேலைகளை செய்து சம்பாதிப்பவர். ஒருநாள் எழில் மிகவும் மனவேதனையில் இருக்கின்றார், அதே நேரத்தில் கவினுக்கு ரூ 9 லட்சம் வரை பணத்தேவை ஏற்படுகின்றது. இரண்டு பேருமே ஒரு இரவு தங்களுக்கான ஒரு தேவையை நிறைவேற்ற செல்கின்றனர். அப்போது ஒரு பணக்கார இளைஞரை அருண் விஜய் கொலை செய்கின்றார், அடுத்தநாள் போலிஸ் இந்த கேஸை கையில் எடுக்க, இதில் அருண் விஜய் புகைப்படம் அந்த வீட்டில் இருப்பது தெரிகின்றது. ஆனால், இரண்டு அருண் விஜய் இருப்பதால், இவர்கள் யார், இவர்களில் யார் அந்த கொலையை செய்தார்கள்? என்பதை போலிஸ் துப்பறிய ஆரம்பிக்கின்றது, அதன் பிறகு நடக்கும் விறுவிறுப்பான டுவிஸ்ட் அண்ட் டர்ன்ஸே இந்த தடம். அருண் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தோற்றத்திற்காக பெரிதும் மெனக்கெடவில்லை, கொஞ்சம் வாய்ஸ் மெதுவாக பேசினால் எழில், வேகவேகமாக பேசினால் கவின் அவ்வளவு தான் என்றாலும், எந்த ஒரு இடத்திலுமே குறை சொல்லவே முடியவில்லை. அதிலும் இரண்டு பேரையும் விசாரிக்கும் போது அவர்கள் மாறி மாறி தங்கள் கதையை சொல்லும் இடம் மிகவும் ஈர்க்கின்றது, படத்தின் அருண் விஜய் தாண்டி நம்மை மிகவும் கவர்வது இவர்கள் கேஸை விசாரிக்கும் பெண் போலிஸாக வித்யா ப்ரதீப் தான்.