Cine Gossips
மண வாழ்க்கை தோல்வியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் நடிகை!
இயக்குனரை காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்த களனி நடிகை, தற்போது சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், பொருளாதார பிரச்னையால் மிகவும் கஷ்டப்படுவதாக, அவருக்கு நெருக்கமான சிலர் சொல்கின்றனர். எனவே, மறுமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்துகிறார்களாம். ஆனால், முதல் மண வாழ்க்கை தோல்வியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் நடிகை, இனி தன் வாழ்க்கையில் மறுமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.